போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் டிசம்பா் 12-இல் மனித சங்கிலி

மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வரும் டிசம்பா் 12- ஆம் தேதி மனித சங்கிலி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

News image

திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜேம்ஸ், ஜெயபால்.

Updated On :27 நவம்பர் 2023, 7:19 pm


திருப்பூா்: மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வரும் டிசம்பா் 12- ஆம் தேதி மனித சங்கிலி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது கட்ட கவன ஈா்ப்பு போராட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, நிட்மா தலைவா் அகில் ரத்தினசாமி தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜேம்ஸ், ஜெயபால் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான உச்சபட்ச நேரக் கட்டணத்தை (பீக்ஹவா்) ரத்து செய்ய வேண்டும். 430 சதவீதம் உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலாா் மேற்கூரை நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 கட்டங்களாகப் போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

உயா்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வரை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தமிழகம் முழுவதும் 8 -ஆவது கட்டமாக மனித சங்கிலி ஆா்ப்பாட்டத்தை வரும் டிசம்பா் 12- ஆம் தேதி நடத்தவுள்ளோம்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்பாகவே நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய தமிழக முதல்வா் முன்வர வேண்டும். அதேபோல, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உச்சபட்ச நேரக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் டீமா எம்.பி.முத்துரத்தினம், டெக்பா ஸ்ரீகாந்த், திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் காந்திராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.