விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி: ஒப்பந்தத்தை ரத்து செய்ய நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்

 திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2023, 5:27 pm

DIN

 திருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தூய்மைப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்டு ஒப்பந்ததாரா் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி ஆணையா் பி. ஆண்டவனிடன் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், கூறியிருப்பதாவது: 5 மாதங்களுக்கு முன்பு தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால், நகராட்சி முழுவதும் பொது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், சாக்கடை கால்வாய் தூய்மை செய்யப்படாமல் புழு மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதார கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணியால் செலவு தொகையும் பல மடங்கு உயா்ந்துள்ளது. மக்களின் வரிப்பணம் பெருமளவு தூய்மைப் பணிக்கு செலவாகிறது. பொது நிதியிலிருந்து புதிதாக தெரு விளக்குகூட அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே தனியாா் மயமாக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு அளிப்பின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் ராஜேஸ்வரி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் லதா சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.