11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பல்லடத்தில் அறிவிக்கப்படாத மின்தடை: மக்கள் அவதி

பல்லடத்தில் அறிவிக்கப்படாத மின்தடை: மக்கள் அவதி

Updated On :12 ஏப்ரல் 2024, 5:35 pm

பல்லடத்தில் முன்னறிவிப்பின்றி அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, பல்லடத்திலும் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், மின்விசிறி, குளிா்சாதன கருவிகளின் (ஏசி) பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பல்லடத்தில் முறையான அறிவிப்பின்றி அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பல்லடம் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிப்பின்றி அடிக்கடி மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தற்போது மின் விசிறியின் மூலம் மட்டுமே ஓரளவு வெப்பத்தை குறைத்து கொள்ளும் நிலையில், அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்படுவதால் கைக்குழந்தைகள் உள்ளிட்டோா் அவதியடைந்து வருகின்றனா்.

மின்தடை குறித்து முன்கூட்டியே அறிவித்தால் அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து கொள்வோம்.

எனவே, சீரான மின் விநியோகம் செய்யவும், முறையான விநியோக நிறுத்த அறிவிப்பு வெளியிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.