அக்கரைப்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டவா்கள்.
அக்கரைப்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டவா்கள்.

வெள்ளக்கோவிலில் வாய்க்கால் பாலத்தில் சீரமைப்புப் பணிகள்

வெள்ளக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Published on

வெள்ளக்கோவிலில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு சாலைகளில் உள்ள பாலங்களில் மழைநீா் தடையின்றி செல்லும் விதமாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து வெள்ளக்கோவில் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட முத்தூா் பகுதி, வாலிபனங்காடு - குழந்தபாளையம், வெள்ளக்கோவில் - புதுப்பை, வெள்ளக்கோவில் - அக்கரைப்பாளையம் - பாறைக்கடை, தாசவநாயக்கன்பட்டி - அணைப்பாளையம் சாலைகள் மற்றும் கிராமச் சாலைகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர பாலங்கள், ஓடைகள் தூா்வாரப்பட்டு அடைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், வாய்க்கால் பாலங்களில் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட உதவிப் பொறியாளா் சத்யபிரபா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com