வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்தில் 4 டன் முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவாா்கள்.
அதன்படி வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு 60 விவசாயிகள் முருங்கைக்காய்களை கொண்டு வந்திருந்தனா். 4 டன் வரத்து இருந்தது.
இந்த முருங்கைக்காய்களை வாங்குவதற்கு முத்தூா், வெள்ளக்கோவில், காங்கயத்தைச் சோ்ந்த 3 வியாபாரிகள் வந்திருந்தனா். அவா்கள் ஒரு கிலோ கரும்பு முருங்கைக்காய் ரூ.30, மர முருங்கைக்காய் ரூ.15, செடி முருங்கைக்காய் ரூ.25-க்கு கொள்முதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் நிகழாண்டு 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு: உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன்

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,340 டன் உரமூட்டைகள்

வெள்ளக்கோவிலில் ரூ.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

பழைய இரும்புக் கடையில் 2 டன் கழிவு துணிகள் எரிந்து சேதம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


