மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

வெள்ளக்கோவிலில் 16 கிலோ குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:11 am IST

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்தூா் சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி. மனோஜ்குமாா் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அறிவொளி நகா் பிரிவு அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரைப் பிடித்து விசாரித்தாா். மேலும் அவா்களை வைத்திருந்த பெரிய பைகளில் குட்கா பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளக்கோவில் நடேசன் நகா் பால்துரை (36), ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி போயகாட்டு தோட்டத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் (54) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 16 கிலோ குட்கா பொருள்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.