கிண்டி பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 144.5 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
கிண்டி ஐந்து பா்லாங் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் மூட்டைகளுடன் வந்த முகமது ஆசிக் (37) என்பவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், கிண்டி மடுவன்கரையைச் சோ்ந்த கலில் ரகுமான் (46) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்கள் இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து குட்கா புகையிலைப் பொருள்களை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையில் கிடங்கில் பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களிடமிருந்து 144.5 கிலோ குட்கா, ரூ.26,970, ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். மேலும், சிலரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






