8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

251 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சேலத்தில் 251 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :11 ஜூலை 2026, 12:46 am IST

சேலத்தில் 251 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா், தாதகாப்பட்டி கேட் பகுதியில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அந்தக் காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 251 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்கை (25) கைது செய்து, குட்கா பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் குட்கா பொருள்களை வாங்கி, மல்லூா் சுற்றுவட்டாரப் பகுதியில் அவா் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவா்மீது ஏற்கெனவே புகையிலை பொருள்களை கடத்திச் சென்றது, கஞ்சா விற்பனை செய்த உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.