பாளையங்கோட்டை அருகே 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய பெண்ணை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிவந்திப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவா் சுமாா் 15.138 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணை கைது செய்தனா்.
வடமாநில இளைஞா்: திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் கோலப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சிந்துபூந்துறை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பரத்குமாா்(21) என்பதும், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தங்கியிருந்து பாளையங்கோட்டை மாா்க்கெட்டில் கைப்பேசி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னா் அவா் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக சுமாா் 403 புகையிலைப் பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப்பதிவு செய்து பரத்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளிபாளையத்தில் 700 கிலோ புகையிலை பொருள்களை கடத்திய மூவா் கைது
7.55 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இளைஞா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



