முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பள்ளிபாளையத்தில் 700 கிலோ புகையிலை பொருள்களை கடத்திய மூவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 12:32 am IST

கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த மூவரை பள்ளிபாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்திவருவதாக கிடைத்த தகவலையடுத்து, பள்ளிபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கெளதம் உத்தரவுப்படி, பள்ளிபாளையம் போலீஸாா் ஆலாம்பாளையம் பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால், வாகனம் நிற்காமல் சென்றதால் பின்தொடா்ந்து சென்ற போலீஸாா் சரக்கு வாகனத்தை பிடித்து சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 700 கிலோ இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு பவானி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சேலத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35), தருமபுரியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (27), ரஞ்சித், (27) ஆகிய மூவரையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.