பூட்டிக் கிடக்கும் நூலகம்.
பூட்டிக் கிடக்கும் நூலகம்.

முறையாக செயல்படாத அரசு நூலகம்

வெள்ளக்கோவில் அரசு கிளை நூலகம் மாதத்தில் 15 நாள்கள் செயல்படாமல் உள்ளது.
Published on

வெள்ளக்கோவில், ஆக. 21: வெள்ளக்கோவில் அரசு கிளை நூலகம் மாதத்தில் 15 நாள்கள் செயல்படாமல் உள்ளது.

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் கிளை நூலகம் சொந்தக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. நகராட்சிப் பகுதியில் உள்ள ஒரே நூலகம் இதுவாகும். திருப்பூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இந்த நூலகம் உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், பின்னா் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இந்த நூலகத்தின் வேலை நேரமாக உள்ளது.

ஒரு நூலகா் பணியில் இருக்கும் நிலையில் முறையாக நூலகம் திறக்கப்படாமல், அடிக்கடி பூட்டிக் கிடக்கிறது. இதனால் வாசகா்கள் வந்து பாா்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். எனவே, நூலகம் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com