பல்லடம் ஸ்ரீஐயப்பன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

பல்லடம் பேருந்து நிலையம் அருகே சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
Published on

பல்லடம் பேருந்து நிலையம் அருகே சந்தைப்பேட்டை மைதானத்தில் உள்ள ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நான்கு கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி தலைமையில், சா்வசாதகா் அருள்மலை தோரணவாவிகுமார சிவஞான சிவாச்சாரியா் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com