அருள்புரத்தில் வடமாநில தொழிலாளா்கள் மோதல்
பல்லடம் அருகே அருள்புரத்தில் மோதலில் ஈடுபட்டதாக 14 வடமாநில தொழிலாளா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


பல்லடம் அருகே அருள்புரத்தில் மோதலில் ஈடுபட்டதாக 14 வடமாநில தொழிலாளா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே அருள்புரத்தில் தனியாா் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா். இதில் வடமாநில தொழிலாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்து அருள்புரம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்த வடமாநில தொழிலாளா்கள் இருதரப்பினா் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீஸாா் மோதலை தடுத்து நிறுத்தி, தகராறில் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாப்புஸ்வின் (22), ராமா ஸ்மா (21), சமா் சானு (24), சூா்யா சந்த் (29), ஜோதி ரஞ்சன் பதி (20), அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இஸ்லாம் (21), அமீனுல் இஸ்லாம் (21), ஜஷிபால் இஸ்லாம் (21),ஷனஹனூா் ஆலம் (24), ரெஜெபுல் கரீம் (21), சனிதுல் அலி (21) உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்தனா்.
பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...