நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் உறவினா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:39 pm

Din

திருப்பூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த உறவினரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

திருப்பூா், போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயது பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் அப்பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அங்கு தங்கை முறையான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆசிரியை, சிறுமியிடம் விசாரித்தபோது அந்த இளைஞா் பாலியல் தொல்லையளித்தது தெரியவந்தது.

இது குறித்து குழந்தைகள் நலக்குழு மூலம் திருப்பூா் வடக்கு மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில், இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.