சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.


வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மூலனூா் கருப்பன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் கே. செல்வராஜ் (64), விவசாய கூலித் தொழிலாளி. இவா் புதுப்பை அமராவதி ஆற்றுப்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 10-ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கலவை வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சிகிச்சைக்குப் பின் அவா் வீடு திரும்பிய நிலையில், தலைவலி அதிகமாக இருந்ததால் அவரை திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு குடும்பத்தினா் அழைத்துச் சென்றுள்ளனா்.
தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் செல்வராஜின் மனைவி பாலாமணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...