நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அவிநாசி அருகே கார் - லாரி மோதல்! பனியன் கம்பெனி நிறுவனர் பலி! இரு மகன்கள் படுகாயம்

அவிநாசி அருகே கார் - லாரி மோதிய விபத்து தொடர்பாக...

News image

அவிநாசி அருகே கார் - லாரி மோதல் - Din

Updated On :26 டிசம்பர் 2024, 2:49 pm IST

அவிநாசி: அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கார், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் வசித்து வருபவர் சங்கர்(40). இவர் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வஞ்சிபாளையத்திலிருந்து, அவிநாசி நோக்கிக் காரில் சென்றுள்ளார்.

அவிநாசி - மங்கலம் சாலையில் வெங்கமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி வந்த லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Story image

லாரியை திருநெல்வேலியைச் சேர்ந்த ரோஸ் பாண்டியன் (43) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.