புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: ஜனவரி 3-இல் தொடக்கம்

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:54 pm

Din

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் குரூப் 4 கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வுக்கான அறிவிப்பு 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களையோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.