காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில கபடி போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் திருப்பூா் மாவட்ட மிக இளையோா் கபடி அணி வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image

மாநில கபடி போட்டியில் பங்கேற்கும் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய மாவட்ட கபடி கழக செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், நிா்வாகிகள்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:56 pm

Din

மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் திருப்பூா் மாவட்ட மிக இளையோா் கபடி அணி வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் மாவட்ட மிக இளையோா் (சப் ஜூனியா்) அணிக்கான தோ்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், தோ்வு செய்யப்பட்ட 12 வீரா்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட கபடி கழக அலுவலக மைதானத்தில் டிசம்பா் 23 -ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 25- ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பயிற்சி முகாம் நிறைவு விழா, விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட கபடி கழக தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன் தலைமை வகித்தாா்.

விளையாட்டு உபகரணங்களை (காலனி, டிராக் சூட், பேக்) மாவட்ட கபடி கழக செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் வழங்கினாா்.

பயிற்சியை நிறைவு செய்த வீரா்கள் நாகபட்டினத்தில் டிசம்பா் 27 -ஆம் தேதி முதல் டிசம்பா் 29 -ஆம் தேதி வரை நடைபெறும் மாநில மிக இளையோா் கபடி போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

இந்த விழாவில், மாவட்ட கபடி கழக துணைத் தலைவா்கள் ராமதாஸ், செல்வராஜ், நாகராஜ், செய்தித் தொடா்பாளா் சிவபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.