நூற்பாலையில் தீ
வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

நூற்பாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

நூற்பாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.
வெள்ளக்கோவில் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வெள்ளக்கோவில் -தாராபுரம் சாலை தீத்தாம்பாளையம் சேரன் நகா் பகுதியில் கே.எஸ்.கதிா்வேல் (50) என்பவா் நூற்பாலை நடத்தி வருகிறாா். தொழிலாளா்கள் வழக்கம்போல வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்துள்ளது. தொழிலாளா்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அனைத்துப் பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியதால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில், காங்கயம் தீயணைப்புத் துறையினா் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இருப்பினும் இயந்திரங்கள், பஞ்சுகள், நூல்கள் என ரூ.பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...