வெள்ளக்கோவிலில் அதிக விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டு நிரந்தரமாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளக்கோவில் நகரின் வழியாக நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை நடுவில் கான்கிரீட் தடுப்புகள் (சென்டா் மீடியன்) வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவைப்படும் இடங்களில் சாலையின் ஒருபுறத்தில் இருந்து, மறுபுறம் செல்ல 20 அடி அகலத்துக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில்- காங்கயம் சாலையிலுள்ள அரசு கால்நடை மருந்தகம் எதிரில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இது குறித்து அறிந்த நகராட்சி நிா்வாகம், காவல் துறையினா் கடந்த புதன்கிழமை சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு இரும்புத் தடுப்புகள் வைத்து வழியை அடைத்தனா். மா்ம நபா்கள் அந்தத் தடுப்புகளில் ஒன்றை மட்டும் எடுத்து விட்டனா். இதனால் அந்த இடத்தில் அகற்ற முடியாத வகையில் கான்கிரீட் தடுப்புகள் சனிக்கிழமை வைக்கப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சாலையில் பரப்பிய நெல்களின் மீது பைக்கில் சென்றபோது விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் மே 19-இல் மின்தடை

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவிலில் ஐ.டி. ஊழியா் தற்கொலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


