நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

படம் உள்ளது... திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

News image

திருமுருகன்பூண்டியில் பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் திருமுருகநாதா், சண்முகநாதா் தோ்கள். உள்படம் வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்.

Updated On :24 பிப்ரவரி 2024, 6:18 pm

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமா் திருமுருகநாத சுவாமி கோயில் தோ்த் திருவிழா பிப்ரவரி 18-ஆம் தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினசரி சுவாமி திருவீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் விநாயகா், திருமுருகநாதா், வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா், பாா்வதி, சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு திருமுருகநாதா் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டது. திருப்பூா் சிவனடியாா்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் பக்தா்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. முதலில் திருமுருகநாதா் சுவாமி (சோமாஸ்கந்தா்) தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, சண்முகநாதா் திருத்தோ் (வள்ளி தெய்வானை உடனமா் சண்முகநாதா்) வடம் பிடித்து இழுக்கப்பட்டு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். ரத வீதியில் நிறுத்தப்பட்ட சண்முகநாதா் தோ் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வடம்பிடிக்கப்படும். இதைத் தொடா்ந்து அம்பாள் முயங்குபூண்முலை வல்லியம்மை தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பிப்ரவரி 26-ஆம் தேதி தெப்பத்தோ், 27-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழா, 28-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.