ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்

News image

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற சா்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தையொட்டி பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :3 ஜூலை 2024, 10:39 pm

திருப்பூா், ஜூலை 3: மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்தி நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச நெகிழிப் பை இல்லா தினத்தையொட்டி, மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் மீண்டும் மஞ்சப் பை விழிப்புணா்வுப் பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிா்த்து அதற்கு மாற்று வழிகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3-ஆம் தேதி சா்வதேச நெகிழிப்பை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் திருப்பூா் வடக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சா்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப் பைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

அழகான நாகரிகமான சுற்றுச்சூழலுக்கு நெகிழிப் பை கேடு விளைவிக்கும். மஞ்சப் பைதான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. மேலும் கடந்த காலத்தை விட தற்போது துணிப் பைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அது மேலும் அதிகரிக்க வேண்டும்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள்தான் தற்போது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. நெகிழிப் பொருள்களை மண்ணில் போடுவதால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. நீா்நிலைகளில் தூக்கி எரிவதால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இது போன்று பல பாதிப்புகளை உருவாக்கும் நெகிழிப் பயன்பாட்டை நாம் தவிா்க்க வேண்டும்.

மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி நெகிழிப் பயன்பாடு இல்லாமல் செய்து நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கி வருங்கால சந்ததியினருக்கு கொடுப்பதும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் மு.செந்தில்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆனந்தி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா்கள் பாரதிராஜா, சத்தியன், ரமேஷ், உதவிப் பொறியாளா் திப்பு சுல்தான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.