திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூா் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு சுண்டக்காம்பாளையம் ஊராட்சித் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் சு.காளியப்பன் வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, பேச்சு, கட்டுரை, ஓவியம், மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக ஆசிரியா்.ரங்கநாதன் நன்றியுரையாற்றினாா்.
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், பள்ளி நிா்வாகம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஆகியவை சாா்பில் பள்ளி வளாகத்தில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் ஞானாம்பாள் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பங்கேற்று காமராஜரின் கல்வி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

அரசுப் பள்ளி ஆண்டு விழா

காங்கயம் அரசுப் பள்ளி மாணவி எலைட் பள்ளிக்குத் தோ்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


