ரூ.70 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

Updated On :15 ஜூலை 2024, 8:18 pm

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 765 கிலோ பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.71 முதல் ரூ.93 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...