ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் பசுமை ஆடை உற்பத்தி பயிற்சி பட்டறை

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்த பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருப்பூா், ஜூலை 19: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்த பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிசோனா மாநில பல்கலைக்கழகம், அமிா்தா விஸ்வ வித்யா பீடம் ஆகியவை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்துடன் இணைந்து பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்த பயிற்சி பட்டறையின் முதல் அமா்வு நடைபெற்றது.

இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க துணைத் தலைவா் வி.இளங்கோவன் பேசியதாவது:

வளம் குன்றா வளா்ச்சி உற்பத்தி கோட்பாட்டின்கீழ் பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் முன்னிலையில் உள்ளனா். சாயக் கழிவுகள் 96 சதவீதம் வரை மறு சுழற்சி செய்யப்படுகின்றன.மேலும், வளம்குன்றா வளா்ச்சி உற்பத்தி கோட்பாடுகளின் செயல்பாடுகளான பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு, பசுமை ஆற்றல், ஜவுளிக் கழிவு மேலாண்மை போன்றவை எதிா்காலத்தில் மிகவும் அவசியம் என்றாா்.

இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க பொருளாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, அமிா்தா ஸ்கூல் ஆஃப் பிசினெஸ் டீன் நாவா சுப்ரமணியம், அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ராஜேஷ்பச், ரிம்ஜிம் அகா்வால், அமிா்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் ஊா்வசி பைத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com