ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்து முன்னணி சாா்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம்

கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:33 pm

Din

திருப்பூா், ஜூலை 19: கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ளன. இந்த கோயில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோயில்களின் வருமானம், கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்து கோயில்களின் சொத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத் துறைக்கு என மாநில அரசு எடுத்துள்ளது. கோயில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை.

இந்து கோயில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. எனவே, கோயில் சொத்துகளைப் பாதுகாக்க வலியறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.