பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி.

உடுமலை அரசு கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

உடுமலை, ஜூலை 19: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சோ.கி. கல்யாணி தலைமை வகித்தாா். உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் இனான்சி மேரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.

எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனா் எஸ்.ஏ.ஐ. நெல்சன் கருத்துரை வழங்கினாா்.

இதையடுத்து, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேராசிரியா்கள் ம.கருணாகரன், எஸ்.கே. நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com