நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண ஆலோசனை

பல்லடம் போக்குவரத்து நெரிசல்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

News image
Updated On :26 ஜூன் 2024, 12:00 am

Din

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் சமூக ஆா்வலா் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு வரைபடத்துடன் கூடிய ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூா், அவிநாசி, தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, கொச்சி உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளும் இணைகின்றன.

பல்லடம் நகர எல்லைப் பகுதிக்குள்ளேயே இவை இணைவதால், நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி சாலையில் பாலம் கட்டுமானப் பணி நடந்து வருவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு கூடுதல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் வரைபடம் தயாரித்துள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வலா் கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை தெரிவித்துள்ளதாவது:

தேசிய நெடுஞ்சாலையுடன் பல்லடம் - திருப்பூா் சாலை சந்திக்கும் பகுதியில், திருப்பூா் செல்லும் வாகனங்கள் திரும்புவதற்கு போதிய இட வசதி இல்லாததால் சிக்னல் விழும் வரை வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் காரணமாக ப்ரீ லெப்ட் இருந்தும், இடதுபுறம் திரும்ப வேண்டிய வாகனங்கள், திருச்சி, மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் செல்லும்வரை காத்திருந்து இடது பக்கம் திரும்ப வேண்டி உள்ளது.

இது தேசிய நெடுஞ்சாலையில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக, தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூா் சாலை இணையும் வகையில் ஒரே ஒரு தரைமட்ட பாலத்தை மட்டும் கட்டினால், திருப்பூா் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் தடையின்றி திரும்பிச் செல்லும். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் தேவையற்ற வாகன நெரிசல் தவிா்க்கப்படும். போக்குவரத்து போலீஸாருக்கும் பணிச் சுமை குறையும்.

மாநில நெடுஞ்சாலைத் துறை உரிய ஆய்வு செய்து தரைமட்ட பாலத்தை கட்டி வாகனப் போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் வரைபடம் மூலம் எங்களின் ஆலோசனையை தெரிவித்துள்ளோம் என்றாா்.