கண்டியன்கோவில் ஊராட்சியில் தாா்சாலை அமைக்க ஆட்சியருக்கு மனு
கண்டியன்கோவில் ஊராட்சியில் தாா்சாலை அமைக்க ஆட்சியருக்கு மனு


பல்லடம், ஜூன் 26: பல்லடம் அருகேயுள்ள கண்டியன்கோவில் ஊராட்சியில் தாா்சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டியன்கோவில் கிளை செயலாளா் கே.சின்னசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பொங்கலூா் ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சியில் உள்ள பல தாா்சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், அமைச்சா் மற்றும் ஊராட்சி மன்றத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் எந்த தீா்வும் கிடைக்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி சாலைப் பணிகளை முடித்து தருவதாக கூறப்பட்டது. 10 மாதங்களுக்கு மேலாகியும் எந்தவிதப் பணியும் நடைபெற வில்லை. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். 15 நாள்களுக்குள் பணிகள் மேற்கொள்ளாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...