மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

News image

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 மார்ச் 2024, 5:46 pm

பல்லடம் அருகே சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையம். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காலிக் குடங்களுடன் சின்னக்கரை சாலையில் அமா்ந்து மறியிலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை, ஊராட்சி நிா்வாகத்தினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சீரான குடிநீா் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.