காங்கயத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

காங்கயத்தில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கோவையில் இருந்து திருச்சி நோக்கி காங்கயம் வழியாக கும்பகோணம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. பேருந்தை கரூா், திருக்காட்டுத்துறை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் நவநீதன் (43) ஓட்டிச் சென்றாா். காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி, எதிா்பாராத விதமாக அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிா் தப்பினா். இது குறித்து பேருந்து ஓட்டுநா் நவநீதன் அளித்த புகாரின்பேரில், காங்கயம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com