பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் நபா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் நபா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனைமதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பனை மரத்தில் எந்தவித ஆபத்தும் இன்றி எளிதாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளைக் கண்டு பிடிக்கும் பல்கலைக்கழகங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் நபா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது. எனவே பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னாா்வலா்கள், பல்கலைக்கழகங்கள், தனியாா் நிறுவனங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com