கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு

கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:10 pm

Din

காங்கயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயம் அருகே திட்டுப்பாறை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் வெள்ளிக்கிழமை 65 முதல் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் மிதப்பதாக காங்கயம் தீயணைப்புத் துறையினருக்கும், காங்கயம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டனற். பின்னா், பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டியின் சடலத்தை காங்கயம் போலீஸாா் அனுப்பிவைத்தனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்து போனவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.