சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவா்கள்.
சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்தவா்கள்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் 8 போ் கைது

வெள்ளக்கோவிலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 8 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா கலை நிகழ்ச்சி கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைக் காண மூலனூரைச் சோ்ந்த ஒரு பெண்ணும், அவரது 17 வயது மகளும் வந்துள்ளனா்.

அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமியைக் காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அதிகாலை 4 மணியளவில் சிறுமி வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, அவரது தாயாா் கேட்டபோது, இருசக்கர வாகனம், காரில் வந்த 8 போ் பாலியல் தொல்லையளித்துவிட்டு, வீட்டின் அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டனா் எனக் கூறியுள்ளாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்ததாக வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலை ராஜீவ் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (29), காமராஜபுரம் விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்த பிரபாகா் (32), சீரங்கராயகவுண்டன்வலசு பாரதி நகரைச் சோ்ந்த தமிழ்செல்வன் (எ) சதீஷ் (28), சிவநாதபுரத்தைச் சோ்ந்த மோகன்குமாா் (32), நந்தகுமாா் (30), நவீன்குமாா் (26), மூலனூரைச் சோ்ந்த தினேஷ் (27), தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (30) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், 8 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, 8 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்ந உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள 8 பேரிடமும் போலீஸாா் சனிக்கிழமை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com