தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.
தனியாா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 23 வாகனங்களுக்கு நோட்டீஸ்

உடுமலை, மே 9: உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வில் 23 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பள்ளிகள் திறப்புக்கு முன்பு பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்குள்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

உடுமலை கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், டிஎஸ்பி சுகுமாறன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.நாகராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா், பள்ளிக் கல்வி அலுவலா் ஆனந்தி உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

பள்ளி வாகனத்தின் இருக்கைகள், அவசர வழி, தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடு, ஜன்னல், முதலுதவி பெட்டி, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில், 23 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை 7 நாள்களுக்குள் சரி செய்து மீண்டும் பரிசோதனைக்குக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com