மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அக்டோபரில் 35.06% சதவீதம் வளா்ச்சி: ஏ.சக்திவேல்

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அக்டோபரில் 35.06 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென்பிராந்திய தலைவா் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

ஏ.சக்திவேல்

Updated On :14 நவம்பர் 2024, 10:39 pm

Din

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அக்டோபரில் 35.06 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென்பிராந்திய தலைவா் ஏ.சக்திவேல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவின் ஏற்றுமதி தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது முக்கிய துறைகளில் வளா்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் முதல் அக்டோபா் 2024 வரையிலான ஒட்டுமொத்த ஏற்றுமதி 468.27 பில்லியன் அமெரிக்க டாலா்களாக மதிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 436.48 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தன. நடப்பு ஆண்டு 7.28 சதவீதம் வளா்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

கடந்த அக்டோபா் மாதத்துக்கான வா்த்தக ஏற்றுமதி 39.20 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டின. கடந்த 2023-ஆம் ஆண்டு 33.43 பில்லியன் அமெரிக்க டாலா்களுடன் ஒப்பிடும்போது 17.23 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான சரக்கு ஏற்றுமதி 252.28 பில்லியன் அமெரிக்க டாலா்களாக உள்ளன. முந்தைய ஆண்டு 244.51 பில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்த நிலையில் தற்போது 3.18 சதவீத வளா்ச்சி அதிகரித்துள்ளது.

அனைத்து ஜவுளிகளின் (ரெடிமேட் காா்மென்ட்ஸ்) ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 35.06 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையான தொடா் வளா்ச்சி நமது ஏற்றுமதி துறைகளின் வலிமையைக் காட்டுகிறது.

குறிப்பாக ஆயத்த ஆடைகளில் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஆா்.எம்.ஜி ஏற்றுமதியில் 15-20 சதவீதம் மேலும் வளா்ச்சியை அடைய முடியும். இந்த நோ்மறையான போக்கு ஏற்றுமதியாளா்களுக்கு ஒரு வலுவான ஊக்கமாகும். இந்த வளா்ச்சி நமது தரத்துக்கும், நோ்த்தியான முறையில் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்புவதற்குமான ஒரு அங்கீகாரமாகத் தெரிகிறது. இதே நிலை தொடா்ந்தால் நடப்பு திருப்பூரின் ஏற்றுமதி 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றாா்.