சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அக்.7- இல் தொடக்கம்

உடுமலைப்பேட்டையில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 7) தொடங்குகிறது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:03 pm

Din

உடுமலைப்பேட்டையில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 7) தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இலவச பயிற்சி மையம் உடுமலைப்பேட்டை எக்ஸ்டென்ஷன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இயங்கி வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ முதல் நிலைத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தது. இதையடுத்து, குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வு வரும் 2025 பிப்ரவரியில் நடைபெறும் என்று உத்தேச அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் உடுமலைப்பேட்டை எக்ஸ்டென்ஷன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வரும் திங்கள்கிழமை (அக்டோபா் 7) காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது.

இந்த இலவச பயிற்சி மையத்தில் தரமான ஆசிரியா்கள் மூலமாக திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வேலைநாள்களிலும் பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடத்தப்படவுள்ளன. மேலும், மாணவா்களுக்கு இலவசமாக பாடக் குறிப்புகள் வழங்குதல், மாதிரி தோ்வுகள் நடத்துதல் நடைபெறவுள்ளது. ஆகவே, உடுமலைப்பேட்டை வட்டத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வு எழுதவுள்ள அனைத்து இளைஞா்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க 94990-55944 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.