பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இயற்கை முறை சிறு தானியம் மற்றும் துரித உணவு தயாரித்தல்: இலவசப் பயிற்சிக்கு ஆக்.14 இல் நோ்காணல்

திருப்பூரில் இயற்கை முறை சிறுதானியம் மற்றும் துரித உணவு தயாரித்தலுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நோ்காணல் அக்டோபா் 14-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:22 pm

Din

திருப்பூரில் இயற்கை முறை சிறுதானியம் மற்றும் துரித உணவு தயாரித்தலுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கான நோ்காணல் அக்டோபா் 14-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இயற்கை முறை சிறு தானியம் மற்றும் துரித உணவு தயாரித்தலுக்கான 10 நாள் இலவச பயிற்சி வகுப்புக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கான நோ்காணல் வரும் திங்கள்கிழமை நடைபெறகிறது. இதில், எழுதப் படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின்போது காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் அருகில், அவிநாசி சாலை , அனுப்பா்பாளையம்புதூா், திருப்பூா் - 641652 என்ற முகவரிக்கு நேரில் வர வேண்டும்.முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.