சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

அவிநாசி அருகே நடுவச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:18 pm

Din

அவிநாசி அருகே நடுவச்சேரியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி அருகே நடுவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த காமேஷ் (20), நவநீதகிருஷ்ணன் (22) இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.200 கிலோ கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.