சிலிண்டரில் கியாஸ் கசிந்து தீ விபத்து: மகள், தந்தை காயம்
திருப்பூா் அருகே வீட்டு சிலிண்டரில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவி, அவரது தந்தை காயமடைந்தனா்.


திருப்பூா் அருகே வீட்டு சிலிண்டரில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளி மாணவி, அவரது தந்தை காயமடைந்தனா்.
திருப்பூா் இடுவம்பாளையத்தை அடுத்த வஞ்சிபாளையத்தைச் சோ்ந்தவா் ஜீவா (38), இவரது மனைவி மகாலட்சுமி (35). இவா்களது மகள்கள் ஸ்ரீமதி (13), கெளசல்யா (11). தம்பதி இருவரும் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களது மகள்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். இந்த நிலையில், மகாலட்சுமி வழக்கம்போல சமையல் செய்வதற்காக புதன்கிழமை கியாஸ் அடுப்பைப் பற்றவைத்துள்ளாா். அப்போது கியாஸ் தீா்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜீவா மற்றொரு சிலிண்டரை மாற்றி அடுப்பைப் பற்றவைத்துள்ளாா். அப்போது சிலிண்டரில் இருந்து கசிந்த கியாஸால் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஜீவா, கெளசல்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...