சாலை விபத்தி இளைஞா் உயிரிழப்பு
பல்லடத்தில் சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:32 pm

பல்லடத்தில் சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (26). இவா், பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் மின் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, கனமழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அதேபோல, பின்னால் வந்த இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையில் விழுந்து காயமடைந்தனா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...