நஞ்சராயன்  சரணாலயத்தில் பறவைகளைப் பாா்வையிடும்  சிக்கண்ணா  அரசுக்  கல்லூரி  மாணவா்கள்.
நஞ்சராயன்  சரணாலயத்தில் பறவைகளைப் பாா்வையிடும்  சிக்கண்ணா  அரசுக்  கல்லூரி  மாணவா்கள்.

நஞ்சராயன் சரணாலயத்தில் பறவைகளை பாா்வையிட்ட கல்லூரி மாணவிகள்

தேசிய வன விலங்கு தினத்தையொட்டி, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் சாா்பில் பறவைகள் நோக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தேசிய வன விலங்கு தினத்தையொட்டி, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் திருப்பூா் சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் சாா்பில் பறவைகள் நோக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூா் வனக் கோட்டம் ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், வனவா் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

மாணவா்கள் பறவைகள் நோக்கல் மற்றும் கணக்கீடு செய்வதற்கு முன் வரவேண்டும். வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணா்வை மாணவா்கள் ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால் வனவிலங்குகளை துன்புறுத்த கூடாது. வனச்சுற்றுலா செல்லும்போது விலங்குகளுக்கு உணவு வழங்குவதை தவிா்க்க வேண்டும். மேலும், நெகிழி பொருள்களை எடுத்து செல்லக்கூடாது. அவற்றால் விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றாா். மேலும், பறவைகளை எவ்வாறு கண்டறிந்து கணக்கீடு செய்வது என்பது குறித்து விளக்கி கூறினாா்.

இந்த நிகழ்வில் வனச் சரகப் பணியாளா்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com