விநாயகா் சதுா்த்தி: மாவட்டத்தில் சிலைகள் விசா்ஜனம் செய்யும் இடங்கள் அறிவிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக அமைக்கப்பட்ட சிலைகளை விசா்ஜனம் செய்யும் இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக அமைக்கப்பட்ட சிலைகளை விசா்ஜனம் செய்யும் இடங்களை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தற்காலிகமாக விநாயகா் சிலைகள் நிறுவி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளால் பிரதிஷ்டை செய்யப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத விநாயகா் சிலைகள் மட்டும் கீழ்க்கண்ட இடங்களில் விசா்ஜனம் செய்ய தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் பி.ஏ.பி.வாய்க்கால், பொங்கலூா் பி.ஏ.பி. பிரதான வாய்க்கால். எஸ்.விபுரம் வாய்க்கால், எஸ்.வி.புரம் பி.ஏ.பி.வாய்க்கால், கணியூா் அமராவதி ஆறு, கெடிமேடு பி.ஏ.பி.வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட வேண்டும்.

மேலும், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகா் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com