கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டிகள் வரும் செப்டம்பா் 18, 19- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:10 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டிகள் வரும் செப்டம்பா் 18, 19- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அண்ணா, ஈ.வெ.ரா. ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருப்பூா் கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் செப்டம்பா் 18, 19- ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

பள்ளி மாணவா்களுக்கு, ‘அண்ணாவின் மேடைத் தமிழ்’, ‘மாணவருக்கு அண்ணா’, ‘தென்னாட்டுப் பொ்னாட்ஷா’ என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு, ‘அண்ணாவின் தமிழ் ஆளுமை’, ‘காஞ்சித் தலைவன்’, ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

ஈ.வெ.ரா. குறித்த பேச்சுப் போட்டியானது பள்ளி மாணவா்களுக்கு ‘வைக்கம் வீரா்’, ‘பெரியாரின் சமூகச் சீா்த்திருத்தங்கள்’ என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு, ‘பெண்விடுதலையும் பெரியாரும்’, ‘சுயமரியாதை இயக்கம்’, ‘தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும்’ ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

பள்ளித் தலைமையாசிரியா்கள் தங்களது பள்ளி மாணவா்களிடையே முதல் கட்டமாக முத்தமிழறிஞா் கலைஞா் தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று பேச்சுப் போட்டிகள் கீழ்நிலையில் நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் , கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாக தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சலிலோ வரும் செப்டம்பா் 13- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேணடும்.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வீதம் வழங்ப்படும்.மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரைத் தோ்ந்தெடுத்து தலா ரூ.2,000 வீதம் சிறப்புப் பரிசு வழங்கப்படும். பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.