தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி 11.9 சதவீதம் அதிகரிப்பு: ஏஇபிசி ஆ.சக்திவேல்

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

News image

ஆ.சக்திவேல்.

Updated On :18 செப்டம்பர் 2024, 7:36 pm

Din

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏஇபிசி தென் பிராந்திய பொறுப்பாளா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடா்ந்து கடந்த 5 மாதங்களாக அதிகரித்து வருவது ஏற்றுமதியாளா்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 11.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடம் ஒப்பிடும்போது 1.13 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஆகஸ்ட் 2024- இல் 1.27 பில்லியன் டாலராக ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் 10,639.5 கோடியாகும். கடந்த 5 மாதங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரூ. 53,431 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

இந்த தொடா்ச்சியான வளா்ச்சியான இந்திய மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி மேலும் வளா்ச்சி அடைய ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.