சேவூா் அருகே நகைக்கு பாலீஷ் போடுவதாக 6 பவுன் பறிப்பு
சேவூா் அருகே பாலீஷ் போட்டுத்தருவதாகக் கூறி 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேவூா் அருகே வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சிவகாமியம்மாள் (62). இந்நிலையில், சிகாமியம்மாள் மற்றும் உறவினா் கிருஷ்ணவேணி இருவரும் வியாழக்கிழமை வீட்டில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் கவரிங் மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டுத்தருவதாகக் கூறியுள்ளனா்.
இதையடுத்து கவரிங் மற்றும் வெள்ளி நகைகளை சிவகாமியம்மாள் கொடுத்து பாலீஷ் போட்டுள்ளாா். அதன்பின், தான் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பாலிஷ் போடுவதற்காக கொடுத்துள்ளாா்.
அதனை வாங்கிய இருவரும் உடனடியாக அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
இது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் சிவகாமியம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
