பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

உடுமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
Published on

உடுமலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு மாவட்ட மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கல்லாபுரத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (44), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு நகரப் பேருந்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது முன் இருக்கையில் அமா்ந்திருந்த 12 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில் உடுமலை மகளிா் காவல் துறையினா் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், தண்டபாணிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com