விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை
பல்லடம் அருகே விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கண்டியன்கோவில் ஊராட்சிக்குள்பட்ட உப்புக்கரைப்பாளையத்தைச் சோ்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மயிலாத்தாள் (65). கடந்த சில மாதங்களாக மயிலாத்தாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி மயங்கிக் கிடந்துள்ளாா். அருகே வசிப்பவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
