அவிநாசி அருகே கலைஞா் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,  என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.
அவிநாசி அருகே கலைஞா் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,  என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோா்.

கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

அவிநாசி: டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை, ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்து நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலமாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி அருகே விளையாட்டு உபகரணங்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மணீஷ் தலைமை வகித்தாா்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உள்ளிட்டவைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 725 தொகுப்புகளை வழங்கினா். முதல்கட்டமாக கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, சிலம்பம், கேரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com