பெருமாநல்லூரில் மின் கசிவால் வீட்டில் தீ

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Published on

பெருமாநல்லூரில் பூட்டியிருந்த வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பெருமாநல்லூா் போயா் காலனியில் வசித்து வருபவா் ஸ்ரீதா் (27). இவரது மனைவி அனுசியா (25). தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவா்கள் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா். திடீரென ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் தீப் பிடித்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த குளா்சாதனப் பெட்டி, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com